‘கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்காமல் போக மாட்டேன்’ என்ற முடிவெடுத்துள்ளார் போலிருக்கிறது, ரெஜினா. அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களாக இருந்தாலும் சரி, கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரி; உடனடியாக நடிக்க சம்மதித்து விடுகிறார்.

அடுத்ததாக, அவரது நடிப்பில் வெளிவர தயாராக உள்ளது, மிஸ்டர் சந்திரமவுலி. ரெஜினா, சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இதுவரை, தான் நடித்த படங்களில் சொந்த குரலில் பேசியது இல்லை. அவருக்கு இருந்த இந்த ஏக்கம், மிஸ்டர் சந்திரமவுலி மூலம் தீர்ந்து விட்டது.
இந்த படத்துக்காக, முதல் முறையாக சொந்த குரலில் பேசியுள்ளதை பரவசத்துடன் கூறி வருகிறார், ரெஜினா. தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த அவரது பார்வை, சமீபகாலமாக, தமிழ் படங்கள் மீது திரும்பியுள்ளது. கோலிவுட், அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Leave A Comment
You must be logged in to post a comment.