சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட .

கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளது இந்த படத்தில் மூன்று பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்அதில் சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ … தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ… என்ற பாடலை தரண் இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். இது குறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது
இந்த பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்காரும். எல்லோருடைய செல்போன்களிலும் ரிங்டோனாக வலம் வரும். இசையமைப்பாளர் தரணுக்கு இந்த படத்தின் பாடல்கள் மீண்டும் மகுடம் சூட்டும் இந்த பாடலுக்கு ராதிகா நடனம் அமைத்துள்ளார். கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது. என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.



Leave A Comment
You must be logged in to post a comment.