துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு முக்கிய ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதுவும் சமூக நோக்கமுள்ள கதையாக அரசியல் கலந்த கலவையாக உருவாகிறது. குறிப்பாக விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பேச இருக்கிறது. இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதுநாள் வரை படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் தளபதி 62 என்ற பெயரில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், வருகிற ஜூன் 21-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர்.
ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மனதில் கொண்டு இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக பர்ஸ்ட் லுக் மற்றும் பட தலைப்பு வெளியிடப்படுகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.