ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நள்ளிரவில் படக்குழுவினர் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டனர். இதில் காரில் அமர்ந்திருக்கும் விஜய், லேப்டாப்பை பார்ப்பது போல் தோன்றுகிறார். படத்தின் தலைப்பிலிருந்து இது அரசியல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.