‘பாகுபலி’யைப் போல் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தால் 100 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என்ற திட்டத்தில் ‘சங்கமித்ரா’ என்ற வரலாற்றுப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.

சுந்தர்.சி. இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தப் படத்துக்காக வாள் சண்டை கற்றுக்கொண்டார் ஸ்ருதிஹாசன். ‘படத்தின் கதையை சொல்லவில்லை’ என்று காரணம் சொல்லி திடீரென படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்.எனவே, ஸ்ருதி ஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 250 கோடி ரூபாயில் தயாரிப்பதாக கூறப்பட்ட இந்தப்படத்தின் கேன்ஸ் திரைப்படவிழாவில் கடந்த வருடம் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கவில்லை. எனவே ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் சுந்தர்.சி.அதன் காரணமாகவோ என்னவோ ‘சங்கமித்ரா’ படம் டிராப் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.