சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் அவரின் தம்பி கார்த்தி நடித்துள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. கார்த்தியுடன் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் விவசாயத்துடன், குடும்ப சென்ட்டிமென்ட் கலந்த படமாக தயாராகி உள்ளது. ஜூலை 13-ம் தேதி படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் ரேக்ளா ரேஸ் போட்டியில், வெற்றி பெறும் கார்த்திக்கு, சூர்யா பரிசு அளிப்பது போன்று காட்சி படமாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.