சசிகுமார் நடித்து கடந்தவாரம் வெளியாகியுள்ள அசுரவதம் படத்தைத் தொடர்ந்து நாடோடிகள்-2 படத்தில் நடித்து வருகிறார்.சமுத்திரக்கனி இயக்கி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

இந்நிலையில், சசிகுமார் மற்றுமொரு படத்தில் நடிக்க இருக்கிறார்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் எனை நோக்கி பாயும் தோட்டாதான் அந்த படம்.தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்தப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சசிகுமார் நடிக்க உள்ளார்.இந்த கேரக்டர் படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருமளவுக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டராம். சம்பள பாக்கிக்காக தனுஷ் தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டதால் சசிகுமார் கேரக்டரை உருவாக்கி ஒருவழியாக படத்தை முடித்திருக்கிறார் கௌதம் மேனன்.இந்த படத்தில் நடித்ததையடுத்து சசிகுமாரை ஹீரோவாக வைத்து கௌதம் மேனன் புதிய படம் தொடங்கும் திட்டத்திலும் இருக்கிறாராம்.விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாவதோடு, படப்பிடிப்பு ஆரம்பித்தாலும் ஆச்சர்யமில்லை.