தம்பி கார்த்தி நாயகனாக நடிக்க, அண்ணன் சூர்யா தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வரவேற்பிற்கு சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில், “மொத்த தியேட்டரும் சிரித்ததிலும், உணர்வுகளுடன் அவர்களை இணைத்துக் கொண்டதையும் பார்ப்பதற்கு ஆனந்தமாய் இருந்தது. மனப்பூர்வமாய் சிரித்தேன், கண்ணீரை நிறுத்த முடியவில்லை. பாண்டிராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. உன்னை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் கார்த்தி. ரசிகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் எங்களது நன்றி,” எனக் கூறியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்து நேற்று வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு பெண்களிடமும், குடும்பத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.



Leave A Comment
You must be logged in to post a comment.