நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலருடன் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர், ஏற்கனவே தான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை திடுமென உயர்த்தி விட்டதாக தகவல் பரவியது.

இது குறித்து நடிகர் கீர்த்தி சுரேஷ், விளக்கமளித்து கூறியதாவது: பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு நான் நடிக்க வரவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து பெயரையும்; புகழையும் ஈட்ட வேண்டும் என்பது மட்டும் தான், இப்போதைக்கு என்னுடைய ஒரே இலக்கு. அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறேன்.
நல்ல மார்கெட் இருக்கும் போது எந்தத் துறையானாலும் அதில் பணத்தை ஈட்டி விட வேண்டும் என்று பொதுவாக சொல்வார்கள்; எல்லோரும் அதையே செய்வார்கள். ஆனால், அதில் எனக்கு நாட்டம் கிடையாது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அது சிறிதானாலும், நிறைவாக கிடைத்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Leave A Comment
You must be logged in to post a comment.