விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். அட்லி இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். சர்ச்சைகளை சந்தித்து, அந்த சர்ச்சையே படத்திற்கு விளம்பராக மாற ஹிட் படமானது.

மெர்சல், சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இதன்மூலம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையை இந்தப்படம் செய்யப்போகிறது. இதற்கு முன்பு ஹிந்தியில் வெளியான தங்கல், பஜ்ரங்கி பைஜான், பாகுபலி போன்ற சில படங்கள் வெளியாகி உள்ளன.
தூம்-3 உள்ளிட்ட சில படங்களை சீனாவில் வெளியிட்ட எச்ஜிசி நிறுவனம், மெர்சல் படத்தையும் வெளியிடுகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.