தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தளபதி 63’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தளபதி விஜய்யின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தளபதி 63 தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டில், ‘வரும் 21.6.2019 மாலை 5.59 மணி வரை மட்டுமே ‘தளபதி 63’ என்ற வார்த்தையை பயன்படுத்த முடியும், அதற்கு பின்…………….. ஃபர்ஸ்ட் லுக் உங்கள் அனைவரது எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்’ என ட்வீட் செய்துள்ளார்.
‘தளபதி 63’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போச்டர் வரும் ஜூன்.21ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் போஸ்டர் வரும் ஜூன்.22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவிருப்பதாகவும், இதில் மகன் விஜய்யின் பெயர் ‘பிகில்’ என்றும், நடிகை நயன்தாராவின் பெயர் ‘ஏஞ்சல்’ என்றும் எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது. மேலும், இந்த படத்தில் இரண்டு விஜய்யும் (அப்பா – மகன் ) ஒரே காட்சியில் இணைந்து தோன்றவிருக்கின்றனராம்.
தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தின் தற்போதைய அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து #ThalapathyBDayCelebrations என்ற ஹேஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரண்டாக்கி வருகின்றனர்.
Leave A Comment
You must be logged in to post a comment.