நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் பல ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார். கடந்த 2018 ல் அவர் விஜய்யுடன் அவர் சர்கார் படத்தில் நடித்திருந்தார், அதன் பின் தமிழில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மலையாளத்தில் மோகன் லாலுடன் மரைக்காயர் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து முடித்துவிட்டார்.
பின்னர் தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் மன்மதடு 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் 5 வருடங்கள் கழித்து கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கிறாராம். இப்படத்தை வினித் சீனிவாசன் இயக்குகிறார். இவர்கள் மூவருமே நட்சத்திரங்களின் வாரிசுகளாம். மூவரும் பள்ளிக்கூட நண்பர்களாம்.
Leave A Comment
You must be logged in to post a comment.