தமிழ் சினிமாவின் பிரபல பாடகி சின்மயி அண்மைகாலமாக Me Too ல் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், குற்றங்கள் குறித்து கருத்து பதிவிட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் அண்மையில் சரவணன் பேருந்தில் பெண்களை வேண்டும் என்றே உரசினேன் என கூறியது பெரும் சர்ச்சையானது. சின்மயியும் இதை விமர்சித்திருந்தார்.
அதே வேளையில் அவரின் கணவரான நடிகர் ராகுல் தெலுங்கில் இயக்கியுள்ள மன்மதடு 2 படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தில் சில முத்தக்காட்சிகள் இருந்தததால் ஹீரோ நாகார்ஜூனா சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது அவரின் கணவருக்கு Chi La Sow படத்திற்காக சிறந்த ஸ்கிரீன் பிளேக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சின்மயி கூற நடிகை காயத்திரி ரகுராம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.