எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.சி.ஜி உள்ளிட்ட தேவையில்லாத பரிசோதனைகளை செய்தனர். கடைசியாக எனக்கு கொடுக்கப்பட்டது ஒரு டோலோ 650 மாத்திரைதான்.

aishwarya-rajesh_

ஏ.எஸ்.பாஸ்கரன் இயக்கத்தில் சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெய். இந்தப் படத்தில் டி.வி.எஸ்.சுந்தரம் குடும்பத்தைச் சேர்ந்த நிக்கி சுந்தரம் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் கிஷோர், சார்லி, அஜய் கோஷ், ராமதாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 23-ம் தேதி ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  “காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்றேன். ஒருநாள் காய்ச்சலுக்காக என்னிடம் ஒரு லட்ச ரூபாய் பில் வாங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.சி.ஜி உள்ளிட்ட தேவையில்லாத பரிசோதனைகளை செய்தனர். கடைசியாக எனக்கு கொடுக்கப்பட்டது ஒரு டோலோ 650 மாத்திரைதான்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் ஆகக்கூடாது என்றும் திங்களன்று தான் வெளியேற வேண்டும் என்றும் புதிய நிபந்தனைகள் எல்லாம் எனக்கு விதிக்கப்பட்டது. அனைத்து மருத்துவமனைகளையும் நான் குற்றம்சொல்ல விரும்பவில்லை. நல்ல மருத்துவமனைகளும் உள்ளன.