கைலாசவடிவு சிவன் (Kailasavadivoo Sivan) என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு சூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். பி .எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார்.
கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. ராக்கட்டின் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 சனவரி 12 ஆம் தேதியில் பதவியேற்றார்.
இளமைக் காலம்
சிவனின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிற்றூர் ஆகும். தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை கற்ற இவர் கணினியில் இளம் அறிவியல் பட்டமும் பின்னர் சென்னையில் உள்ள எம்.ஐ டி.யில் ஏரோநாட்டிகல் பொறியியலும் படித்தார். பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தார்.
விருதுகள்
- சிறி அரி ஓம் அசிரம் பிரடிட் டாக்டர் விக்ரம் சாரா பாய் ஆய்வு விருது (1999)
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மெரிட் விருது (2007)
- டாக்டர் பிரன் ராய் விண்வெளி அறிவியல் விருது (2011)
- மதிப்புமிகு அலும்னஸ் விருது (எம்.ஐ.தி. அலும்னஸ் கழகம்) (2013)
- சத்தியபாமா பல்கலைக் கழக அறிவியல் முனைவர் விருது (2014)
- ஆனந்த விகடன் “டாப் 10” மனிதர்கள் விருது, 2016)
அப்துல் கலாம் விருது (தமிழக அரசால் வழங்கப்படும் விருது)
எனக்கு ட்விட்டரில் கணக்கே இல்லை: இஸ்ரோ தலைவர் சிவன்
ட்விட்டரில் இதுவரை தான் கணக்கு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
இஸ்ரோ தலைமை அதிகாரியாக பதவி வகித்து வரும் சிவன் தமிழகத்தை சேர்ந்தவர். சிவன் தலைமை பொறுப்பு ஏற்றது முதல், விண்வெளி சார்ந்து பல புதிய ஆராய்ச்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற ஆராய்ச்சிகளால், வளர்ந்த நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகளின் கவனம் இந்தியா மீது திரும்பி உள்ளது. சிவன் பதவி ஏற்ற நாள் முதலே, இஸ்ரோ மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஊடகங்கள் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிட தொடங்கின. இதற்கு சிவன் எளிமையுடன் பத்திரிக்கை நிருபர்களை சந்திப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பூமியை சுற்றி வரும் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 2 விண்கலம் விண்ணுக்கு சமீபத்தில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் நிலாவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய விக்ரம் என்ற லேண்டரும் அனுப்பி வைக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் செப். 7 ம் தேதி அதிகாலை நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் இருந்து நமக்கு கிடைத்து வந்த தகவல்கள் தடைப்பட்டது.
லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு குறித்து அறிய நாடு முழுவதிலும் பலர் ஆவலுடன் கண் விழித்து தூங்காமல் இருந்தனர். இப்போதும் பெரும்பாலானவர்கள் லேண்டர் குறித்த செய்தியை அறிய தொடர்ந்து இஸ்ரோவை பின் தொடர முயல்கின்றனர்.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை காண பிரதமர் மோடி இஸ்ரோ மையத்துக்கு நேரில் சென்றிருந்தார். லேண்டர் உடனான தொடர்பு துண்டிப்படைந்ததைத்து மோடி, இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த நிகழ்வு தோல்வி அடையவில்லை, நமக்கு கிடைத்த வெற்றியே என பல அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய சிவன், விக்ரம் லேண்டர் எந்த நிலையில் உள்ளது என்பதை விரைவில் அறிந்து அது குறித்து தகவலை திரட்டி, 14 நாட்களுக்குள் அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். மேலும் சிவன் நேற்று மாலை கூறுகையில், நிலாவை சுற்றி வரும் ஆர்பிட்டர் கருவி விக்ரம் லேண்டரை தெர்மல் போட்டோ பிடித்துள்ளதாகவும், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாகவும் கூறினார்.
இந்த தகவலையடுத்து நாட்டில் பலருக்கு விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு புதிப்பிக்கப்படும் என நம்பிக்கை எழுந்தது. எனினும், தொடர்ந்து விக்ரம் லேண்டர் குறித்து அறிய மக்கள் சமூக ஊடகங்களில் இஸ்ரோ கணக்கை கண்டறிந்து அதை பின்தொடர் ஆரம்பித்தனர். அதேபோல், இஸ்ரோ தலைவர் சிவன் ட்விட்டர் கணக்கை பின்தொடரவும் பலர் இப்போதும் முயற்சிக்கின்றனர்.
டூவிட்டரில் சிவன் கணக்கு குறித்து தேடும்போது ஏராளமான கணக்குகள் சிவன் இஸ்ரோ தலைவர் என்ற பெயரில் நம்மை குழப்பி விடுகிறது. அதில் எதிலும் புளூ டிக் இல்லை. அதாவது அவை எதுவும் அதிகாரப்பூர்வ கணக்கில்லை. அதேபோல், பெரும்பாலான கணக்குகள் இந்த (செப்டம்பர்) மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்களே ஆனபோதும், விக்ரம் லேண்டர் மீதுள்ள எதிர்பார்ப்பால் பல ஆயிரம்பேர் இந்த கணக்குகளை பின்தொடர ஆரம்பித்து விட்டனர். இதுகுறித்து சிவன் பத்திரிக்கைகளுக்கு கூறுகையில்,”நான் ட்விட்டரில் கணக்கு ஏதும் இதுவரை வைத்துக் கொள்ளவில்லை’’ என்றார்.
மேலும், இதுகுறித்து இஸ்ரோ வட்டத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டர் குறித்த அனைத்து தகவல்களையும் உடனடியாக அறிய, லிங் ஒன்றை உருவாக்கி ஷேர் செய்துள்ளது. அந்த லிங் bit.ly/2m5ihAM என்பதே. இஸ்ரோ இந்த இணையப்பக்கத்தில் விக்ரம் லேண்டர் குறித்து கிடைக்கும் சிறிய தகவல்களையும் உடனுக்குடன் பகிந்து வருகிறது.
இந்த போலி கணக்குகள் இப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த கணக்குகளை உருவாக்கி இஸ்ரோ தலைவர் சிவன் கூறுவதுபோல பொய்யாக தகவல்களை பரப்பி வரும் நபர்கள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
Leave A Comment
You must be logged in to post a comment.