லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் பிகில் படத்தோடு வெளியான படம் கைதி. பாடல், ரொமான்ஸ் என எதுவும் படத்தில் கிடையாது.

இப்படிபட்ட ஒரு படம் தீபாவளி அன்று வெளியாகி எப்படி சாதனை படைக்கும் என பலரும் விமர்சித்தார்கள். ஆனால் கதை நின்று பேசியுள்ளது, படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வெற்றி கண்டு வரும் இந்த கைதி படத்தை திரையரங்கில் ஒரு நபர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்துள்ளார். அதைப்பார்த்த சினிமா துறையின் PRO அந்த நபரை தட்டிக்கேட்க அவன் சண்டைக்கு வந்துள்ளான். உடனே அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தவரை மிரட்ட பின் அவர் வீடியோ எடுக்காமல் திரைப்படம் பார்த்துள்ளான்.

இந்த தகவலை PRO ஜான் அவர்களே டுவிட்டரில் போட்டுள்ளார்.