பிகில் படம் தற்போது தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆறு நாட்களில் படம் 200 கோடியை வசூல் தொட்டுவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பிகில் படத்தின் ஒரு காட்சியை சென்னை தேவி பரடைஸ் திரையரங்கம் ரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இது பற்றி சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது பற்றி அந்த தியேட்டர் உரிமையாளர் விளக்கம் கொடுத்துள்ளார். “15 நிமிட இடைவெளியில் இரண்டு ஸ்கிரீனில் காட்சிகள் போடவிருந்தோம். ஆனால் கூட்டம் அதிகம் வரவில்லை. எல்லாம் 5 நாட்களில் பார்த்து முடித்திருப்பார்கள். வந்தவர்கள் லேட்டாக போடப்படும் ஷோவுக்கு தான் டிக்கெட் வாங்கினார்கள். அதனால் ஒரு காட்சியை ரத்து செய்துவிட்டு மற்றொரு ஸ்கிறீனில் மட்டும் படம் போட்டோம். தற்போது இரவு காட்சிக்கு கூட்டம் அதிகம் உள்ளது. அதனால் இரண்டு ஸ்கிறீனிலும் படம் ஓடுகிறது” என விளக்கம் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர். இவர் தீவிர கமல்ஹாசன் அவர்களின் ரசிகர், அவரின் தாக்கம் இவரிடம் அதிகம் உள்ளதை கண்டிருப்போம்.
பாடல்கள், காதல் காட்சிகள் என இல்லாமல் ஒரு புதுவித முயற்சியில் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ரசிகர்கள் அதிகம் வரவேற்றுள்ளனர், வசூலிலும் படம் மாஸ் செய்து வருகிறது.
தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு 5 நாள் முடிவில் படம் ரூ. 60 லட்சம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment
You must be logged in to post a comment.