நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஒரு டிவி விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மண்டி என்கிற ஆன்லைன் ஷாப்பிங் ஆப் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

Vijay Sethupathy mandi

அதற்கு சிறு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிகொண்டு துணை போனதற்கு கண்டனம் தெரிவிக்க சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்திற்கு எதிரில் நவம்பர் 4ம் தேதி போராட்டம் நடைபெறும் என சில்லறை வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.