இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடைவிடுமுறைக்கு இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தை அடுத்து விஜய்யை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. லோகேஷ் கனகராஜே அடுத்த படத்தை இயக்குவார் என்றும், வெற்றிமாறன் கதையில் விஜய் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இயக்குநர் ஷங்கர், விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஷங்கர், விஜய்க்கான கதை தயார். எப்போது வேண்டுமானாலும் இருவரும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் ஷங்கர் அப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் கடந்த 2012-ம் ஆண்டு நண்பன் படம் வெளியாகி வசூலை அள்ளியது. ஆனால் அது நேரடித் தமிழ்ப் படமாக இல்லை. பாலிவுட்டில் வெளியாகி ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருந்தது. அதனால் இருவரும் இணைந்து நேரடித் தமிழ்ப் படத்தைத் தர வேண்டும் என்பதும் ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது.
wow!, great effort to collect informations and sharing, Thank you.