விஜய்சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி கொடுத்த புதிய பட்டம்!
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தில் தான் முதல்முறையாக முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்பது தெரிந்ததே. தேசிய விருது பெற்ற இந்த படத்தை அடுத்து அவர் ’தர்மதுரை’ ‘மாமனிதன்’ ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய திரைப்படங்களிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ’தர்மதுரை’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது தான் விஜய் சேதுபதிக்கு ’மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை இயக்குனர் சீனுராமசாமி கொடுத்தார் என்பதும் அந்தப் பட்டம் தான் இன்றுவரை விஜய்சேதுபதி படங்களின் டைட்டிலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு புதிய பட்டத்தை இயக்குனர் சீனு ராமசாமி வழங்கியுள்ளார். அதுதான் ’வேர்ல்ட் பீப்பிள்ஸ் ஸ்டார்’. உலக மக்களின் ஸ்டார் என்ற பொருள்படும் இந்த பட்டம் தற்போது விஜய்சேதுபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது
விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைஃப் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடிக்க இருக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்து சீனுராமசாமி இந்த பட்டத்தை விஜய்சேதுபதிக்கு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலிவுட் திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது என்பதும் இந்தப் படத்தை ’அந்தாதூன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave A Comment
You must be logged in to post a comment.