சூப்பர்ஹிட் மலையாள படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்
கடந்த ஜனவரி 15ஆம் தேதி மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன். ஜியோ பேபி என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் நிமிஷா சுரேஷ் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் மலையாள திரையுலகில் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் தமிழில் தயாராக இருப்பதாகவும் ஐஸ்வர்ய ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை நடைபெற்றதோடு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர். கண்ணன் இயக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் இயக்குனர் ஆர்.கண்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். எம்.கே.ஆர்.கே புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும், இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
Leave A Comment
You must be logged in to post a comment.