‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. அந்த படத்தை தொடர்ந்து வம்சம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் சுனைனாவுக்கு மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை.

 

இந்நிலையில் விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘காளி’ படம் தனக்கு செகண்ட் இன்னிங்ஸை உருவாக்கித் தரும் படமாக எண்ணி நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்தப் படம் தவிர, தனுஷை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்துள்ளார் சுனைனா.

இதற்கிடையில் மற்றொரு தளத்தில் பயணத்தை துவங்கியுள்ளார் சுனைனா. ‘திரு திரு துறு துறு’ என்ற படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி, வெப் சீரீஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் சுனைனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு துவங்கி சத்தமில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வெப்சீரீஸில் நடிப்பது பற்றி வெளியே பப்ளிசிட்டி செய்ய வேண்டாம் என்று இயக்குநரிடம் அன்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் சுனைனா.