சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் ’விக்ரமின் 58வது படமான ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த காதலர் தினத்தன்றே வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் விக்ரம் நடித்து வரும் 12 வேடங்களின் லுக்கும் ஃபர்ஸ்ட்லுக்கில் வரவேண்டும் என திட்டமிட்டதை அடுத்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீசில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் அஜய்ஞானமுத்து தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Comment
You must be logged in to post a comment.