குழந்தைகளின் மன உலகை விவரிக்கும் வகையில் புலியையும், காட்டையும் மையமாக வைத்து, அட்வெஞ்சர் திரைப்படம் எடுக்கப்படவிருக்கிறது. பெயரிடப்படாத அந்த படத்தை புதிய இயக்குநர் ஹரிஷ் ராம் என்பவர் இயக்குகிறார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸை மையமாகக் கொண்டே எடுக்கப்படவிருக்கிறது. படத்தில் ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக கிராபிக்ஸ் காட்சிகள் கட்டாயம் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர்கள் விவேக், மெர்வினோடு அனிருத்தும் இணைந்து இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படம் காட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் என்பதால், கேரளாவின் வனப் பகுதிகள் மற்றும் வட இந்தியாவின் வனப் பகுதிகளில் வரும் அக்டோபரில் இருந்து, படபிடிப்பு முழுவேகத்தில் நடக்கும் என படக் குழு தெரிவித்துள்ளது.