கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். இதுவரை குணசித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், முதன்முறையாக தற்போது தாதா 87 என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜனகராஜூம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் முறுக்கு மீசையுடன் மிரட்டலான நடிப்பை சாருஹாசன் வெளிப்படுத்தியுள்ள போஸ்டர்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு ஏஜிங் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துள்ளனர்.
ரஜினியின் காலா படம் திரைக்கு வந்திருப்பதை அடுத்து, தாதா 87 படத்தின் விளம்பர போஸ்டரில் ரஜினி, சாருஹாசன் போட்டோவை இணைத்து வாழ்த்து சொல்லியுள்ளனர். அந்த போஸ்டரில் சாருஹாசனை ஏஜிங் சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
சமீபகாலமாக ரஜினியை உயர்வாக பேசி வருகிறார் சாருஹாசன். ரஜினியை மக்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி தான் என கூறியிருந்தார்.



Leave A Comment
You must be logged in to post a comment.