துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் பட்டாஸ். படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்றது.
இதில் சினேகா மற்றும் மெஹரீன் நாயகியாக நடித்துள்ளனர். படம் வரும் ஜனவரி 16, 2020 வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரியும், இதற்கிடையில் படக்குழு பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளாராம், அப்பாடலும் நாளை அதாவது டிசம்பர் 25ம் தேதி என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Leave A Comment
You must be logged in to post a comment.