வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி விருதுகளை குவித்த படம் அசுரன்.
மலையாள நடிகை மஞ்சு வாரியார் ஹீரோயினாக நடிக்க படம் மிகவும் பேசப்பட்டது. நல்ல விமர்சனங்களும் அதிகமாக கிடைத்தன.
இப்படத்தில் தெலுங்கில் நாரப்பா என ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் வெங்கடேஷ் தனுஷின் சிவசாமி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி அட்டகாசம் செய்த, அதை பாரத்த பல பிரபலங்கள் சமந்தா, ராணா டகுபதி , நடிகை ராதிகா என பலர் வாழ்த்தியுள்ளார்கள்.
#VictoryVenkatesh என டேக் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மஞ்சுவாரியார் ரோலில் பிரியாமணி நடிக்கிறாராம்.

Leave A Comment
You must be logged in to post a comment.