ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நவம்பர் 29-ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

2.0 டீசர் எப்போது வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார், இப்படத்தின் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி.

ரசிகர் ஒருவர், டுவிட்டரில், 2.0 டீசர் எப்போது ரிலீஸாகும், ஒரு சின்ன க்ளு-வாவது கொடுங்கள் என ரசூலிடம் கேட்க, அதற்கு அவர், இந்தியாவிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது? என பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் 2.0 டீசர் ஆகஸ்ட் 15-ம் தேி, சுதந்திர தினத்தில் ரிலீஸாகும் என தெரிகிறது.