பிரபுதேவா – தமன்னா நடிப்பில் தேவி படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், அதன்பிறகு சாய்பல்லவி நடிப்பில் தியா படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் பிரபுதேவா நடிப்பில் லட்சுமி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தபடத்தில் பிரபுதேவாவுடன் தித்யா பாண்டே, ஐஸ்வர்யாராஜேஷ், கோவை சரளா, கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
Leave A Comment
You must be logged in to post a comment.