2018ம் ஆண்டின் ஏழாவது மாதம் இன்றுடன் முடிவடையப் போகிறது. இந்த ஏழு மாதங்களில் 80 படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளன.
ஒரு வாரத்திற்கு சராசரியாக ஐந்து படங்கள் வரை அதிகபட்சமாக வெளிவந்துள்ளன. ஆனால், இந்த வாரம் ஆகஸ்ட் 3ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் இன்றைய நிலவரப்படி சுமார் 9 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு படங்களுக்கு இன்னும் தியேட்டர்கள் பற்றிய விவரங்களைக் கூட அவர்கள் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் 3ம் தேதி வெளியீடு என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வார நிலவரப்படி 11 படங்கள் வெளிவருவதாக இருந்தன. அவற்றில் ‘ஓ காதலனே, அழகுமகன்’ ஆகிய இரண்டு படங்கள் பின்வாங்கிவிட்டன. மீதமுள்ள படங்களில் “கஜினிகாந்த், காட்டுப்பய சார் இந்த காளி, மணியார் குடும்பம், எங்க காட்டுல மழை, கடல் குதிரைகள், கடிகார மனிதர்கள், உப்பு புளி காரம், நாடோடி கனவு, போயா” ஆகிய 9 படங்கள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படங்கள். இந்தப் பட்டியலிலும் அடுத்த சில நாட்களில் மாற்றங்கள் வரலாம். கடைசியாக ஐந்து படங்கள் வந்தாலே அதிகம் என்று நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அடுத்த சில மாதங்களில் ஆகஸ்ட் 15, வினாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் பட வெளியீட்டில் கடும் நெருக்கடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.