மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் உலக அளவில் 2 பில்லியன் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏப்ரல் 27ம் தேதி வெளியான இந்தப் படம் இந்தியாவிலும் பெரிய வசூல் சாதனை படைத்தது.

48 நாட்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவதார் படம் இந்த சாதனையை 47 நாட்களில் படைத்துவிட்டது. ஒரே ஒரு நாளில் புதிய சாதனையை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் இழந்துவிட்டது.
அமெரிக்காவில் மட்டும் 656 மில்லியன் யுஎஸ் டாலரையும், வெளிநாடுகளில் 1.346 பில்லியன் யுஎஸ் டாலரையும் இப்படம் வசூலித்துள்ளது. 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ள படங்களில் தற்போது 4வது இடத்தை இந்தப் படம் பிடித்துள்ளது.
இதற்கு முன் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் அவதார் படம் 2.78 பில்லியன், டைட்டானிக் படம் 2.18 பில்லியன், ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேக்கன்ஸ் படம் 2.06 பில்லியன் வசூலித்துள்ளன. மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ஒரு படம் 20 பில்லியன் வசூலைத் தாண்டுவது இதுவே முதல் முறை.
2 பில்லியன் யுஎஸ் டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 13,534 கோடி. படத்தின் பட்ஜெட் சுமார் 2000 கோடி.



Leave A Comment
You must be logged in to post a comment.