டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை ரஜினி, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘அருவி’ படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு சிறந்த தயாரிப்பாளராகவும், அருவி கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் சிறந்த நடிகையாகவும், அஞ்சலி வரதன் சிறந்த துணை கதாபத்திரமும், படத்தொகுப்பு செய்த ரேமண்ட் டெரிக் சிறந்த படத்தொகுப்பாளராகவும் விருதுகள் பெறவிருக்கின்றனர். ‘அருவி’ தொடர்ந்து பல விருதுகளை குவித்து வருவதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.