இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் வசூல் சாதனை புரிந்த படமாக கடந்த வருடம் வெளியான ‘பாகுபலி 2’ படம் அமைந்தது. நேரடி ஹிந்திப் படங்களின் வசூலையும் முறியடித்து டப்பிங் படமான இந்தப் படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்தது.

தென்னிந்திய அளவில் ரஜினிகாந்த் படங்கள் தான் இதுவரை வசூலில் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அவற்றையும் முறிடியத்த பெருமை ‘பாகுபலி 2’ படத்திற்கு உண்டு. 1700 கோடி வரை வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ம் தேதி வெளியானது.
ஜப்பான் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ‘பாகுபலி 2’ படம் கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் 100வது நாளை அங்கு கடந்துள்ளது. அங்கு இந்தப் படம் 13 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. படத்திற்கு பெரிய அளவில் வசூல் இல்லை என்றாலும் அங்குள்ள பெரும்பாலான ரசிகர்கள் ‘பாகுபலி 2’வின் ரசிகர்களாக மாறியிருப்பதுதான் ஆச்சரியமானது என்கிறார்கள். அடுத்து இப்படத்தை சீனாவில் வெளியிடும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.