இந்தியப் படங்களுக்கு சீனா நாட்டில் சமீப காலமாக பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. அடுத்து சில வாரங்களுக்கு முன் சல்மான் கான் நடித்த ‘பஜ்ரங்கி பைஜான்’ படம் வெளியாகி 200 கோடி வசூலைத் தாண்டியது.

 

கடந்த ஆண்டு கோடையில் வெளிவந்த ‘பாகுபலி 2’ படம் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அப்படம் சீனாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில அரசியல் சூழ்நிலைகளால் அப்போது படத்தை வெளியிட முடியவில்லை என்றார்கள்.

இப்போது சீனாவில் ‘பாகுபலி 2’ படத்திற்கு சென்சார் கிடைத்துவிட்டதாம். ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தை வெளியிட்ட நிறுவனமே இரண்டாவது பாகத்தையும் வெளியிட உள்ளதாம். இது பற்றிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.