நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாயில் மாரடைப்பால் காலமானார். ஸ்ரீதேவியின் மரணம் திரை உலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

 

 

 

தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து தென்னிந்திய மொழிகளில் கோலோச்சி பாலிவுட்டில் வெற்றி கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி 50 ஆண்டுகாலம் இந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.