அமைதியை தேடி கோவிலுக்கு சென்ற பிக்பாஸ் ஷிவானி
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேல் அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி இருந்தார். ஆனால் கடைசியாக நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அபாரமாக விளையாடி சிங்கப்பெண்ணாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை நிறுத்திவிட்டு டீசண்டான புகைப்படங்களை கடந்த சில நாட்களாக அவர் பதிவு செய்து வருகிறார். இருப்பினும் வழக்கம்போல் அவரது ஒவ்வொரு புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் அமைதியை தேடி கோவிலுக்கு சென்று இருப்பதாக தற்போது கோவில் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். சென்னை அருகே உள்ள பாடி சிவன் கோவிலில் வழிபாட்டிற்குப் பின்னர் அமைதி கிடைத்ததாகவும் புகைப்படத்துடன் ஒரு பதிவை ஷிவானி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். ஷிவானியின் இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் ஆயிரத்துக்கும் மேலான கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Comment
You must be logged in to post a comment.