பிகில் உட்பட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் போட அனுமதியில்லை என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது. அதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலர்தெரிவித்தனர். ஆனாலும் சாதகமான முடிவு எதுவம் வராமல் இருந்தது.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை, ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது என உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தால் அதை திருப்பி தரும்படி கூறியுள்ளார் அவர்.

Leave A Comment
You must be logged in to post a comment.