தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவமும் மூன்று நாட்களில் டாஸ்மாக் கடைகளில் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு 360 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. அதனை மறுக்கும் வகையில் மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவுவதாக கூறினார்.
இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாமென கேட்டுக் கொண்ட அவர், மதுவிற்பனைக்கு எந்த ஆண்டும் இலக்கு நிர்ணயித்தது இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தீபாவளி தினமான நேற்று ரூ. 172 கோடிக்கும், தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் ரூ. 183 கோடிக்கும் , வெள்ளிக்கிழமை ரூ.100 கோடி என மூன்று நாட்களில் ரூ.455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
தமிழகத்தில் பிகில் படம் சுமார் ரூ 75 கோடி வரை 4 நாட்களில் வசூல் செய்துள்ளது .
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற நான்கு நாட்களாக நடந்த முயற்சிகள் வீணானதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.