அட்டகத்தி, பீட்சா உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். தனது ‘திருக்குமரன் எண்டர்டெயிமெண்ட் நிறுவனம்’ சார்பில் பல படங்களைத் தயாரித்த இவர் தொடர்ந்து வெற்றிகளை ருசித்தார்.

அதன்பிறகு அவர் தயாரித்த சில படங்கள் தோல்வியடைந்தன. குறிப்பாக அவரே இயக்கிய மாயவன் படம் தோல்வியடைந்தது. இந்நிலையில் தற்போது சின்ன பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்து வருகிறார்.

அடுத்து, அவர், ‘ஜாங்கோ’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது.

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகவும், ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய மனோ கார்த்திகேயன் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜுங்கா படம் வெளியாகி சில நாட்களே ஆனநிலையில் ‘ஜாங்கோ’ என்ற பெயரில் படத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த தலைப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.