தனுஷின் ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தனுஷ் முடித்து கொடுத்தார் என்று செய்தி வெளியானது
மேலும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகும் தேதி நாளை காலை 11.06 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Comment
You must be logged in to post a comment.