`வடசென்னை’, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு நடுவே, தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நேற்று துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு முக்கிய காட்சிகளை முடித்த பின்னர் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

`மாரி’ படத்தின் முதல் பாகத்தில், தனுஷ் லோக்கல் ஏரியா கேங்ஸ்டராக வந்து குசும்பு செய்து கலக்கியிருப்பார். அதேபோல் அதன் அடுத்த பாகமான `மாரி-2′ படத்திலும் தனுஷ் தகராறு செய்யும் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2′ படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.