சூப்பர் ஸ்டா ரஜினிகன்தின் ‘பேட்ட’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

‘பேட்ட’ திரைப்படத்திற்கு முன்பாகவே தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த கூட்டணி அமையவில்லை. அதையடுத்து இருவரும் தனித்தனியே தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில், மீண்டும் இருவரும் இணையவிருக்கும் புதிய திரைப்படம் லண்டனில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் லண்டனில் தொடங்கி, சுமார் 60 நாட்கள் அங்கேயே ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.