‘கர்ணன்’ டீசர்: தனுஷின் அதிரடி அறிவிப்பு!
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆன நிலையில் சமீபத்தில் வெளியான பண்டாரத்தி புராணம் என்ற பாடலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்த நிலையில் ’கர்ணன்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலரை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் சற்று முன்னர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ டீசர் வெகு சீக்கிரம் ரிலீஸ் ஆகும்’ என்று அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பை அடுத்து ’கர்ணன்’ படத்தின் டீசர் குறித்த ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment
You must be logged in to post a comment.