‘கதாநாயகன்’ படத்தைத் தொடர்ந்து ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ராட்சசன்’, ‘ஜகஜால கில்லாடி’, ‘காடன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப்படங்களில் முதலில் வெளியாகும் படம் எது என்பது இன்னும் தெரியவில்லை.

‘ராட்சசன்’ படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு தயாரித்த, இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் தோல்வி காரணமாக ‘ராட்சசன்’ படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதால், தான் நடித்த மற்றொரு படமான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை முதலில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணு விஷால்.

இதற்கிடையில், புதுமுக இயக்குநர் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது தனுஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஷ்ணு விஷால்.

இப்படத்தை யார் இயக்குகிறார், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த தகவல்களை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ்.