தற்போது, தமிழ் சினிமாவில், அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஹீரோ, யார் தெரியுமா; சந்தேகமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் தான். அடங்காதே, 4ஜி, ஐங்கரன் என, ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள், அவரது கைவசம் உள்ளன.

 

அடுத்ததாக, அவர் நடிப்பில் வெளியாகும் படம் தான், செம. இதில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளது, அர்த்தனா. சமீபகாலமாக, ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள், சரியாக போகவில்லை என்ற குறை இருந்தது. அந்த குறையை, நாச்சியார் தீர்த்து வைத்தது. செம படத்தில், ஜி.வி.,க்கு ஜாலியான காமெடி கேரக்டராம்.

‘அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற பெயரெடுக்க வேண்டும். எனக்கு பொருத்தமான கேரக்டர்கள் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்’ என்கிறார், ஜி.வி.பிரகாஷ்.