தனுஷ் நடிப்பில் ’பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கர்ணன்’. கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து வரும் இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்று நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கதை என்றும் கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷுடன் பலர் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் கெளரி கிஷான் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி திரிஷா நடித்த ’96’ படத்தில் ஒரு குட்டி ஜானுவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இணைந்த கெளரி கிஷான் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தனுஷுடன் இணைந்து நடிப்பதில் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Comment
You must be logged in to post a comment.