நகரத்தை மையமாக வைத்து தயாராகும் படங்களை விட, கிராமத்து படங்களில் நடித்தால் தான், கடைக்கோடி ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலிருக்கிறது, கார்த்தி.

அவர் நடித்த கொம்பன் என்ற கிராமத்து படம், மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு பின், தொடர்ச்சியாக, நகரத்து இளைஞன் கேரக்டர்களில் சில படங்களில் நடித்து வந்தார். இப்போது மீண்டும், கிராமத்து பக்கம், தன் பார்வையை திருப்பியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் என்ற படம், இப்போது தயாராகி வருகிறது.
விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தின் கதை தயாராகியுள்ளதாம். வனமகன் படத்தில் நடித்த சாயீஷா தான், இதில், கார்த்திக்கு ஜோடி. இவர் தவிர, பிரியா பவானி சங்கரும், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ”கொம்பனைப் போலவே, கடைக்குட்டி சிங்கமும், எனக்கு நல்ல வெற்றியை பெற்றுத் தரும்,” என, நம்பிக்கையுடன் கூறுகிறார், கார்த்தி.



Leave A Comment
You must be logged in to post a comment.