சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ள ‘தமிழ்ப்படம் 2’ இன்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கஸ்தூரி.

சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த தமிழ்ப்படம் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப்படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
ரஜினி தொடங்கி தமிழ்சினிமா ஹீரோக்கள் பலரையும் கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. அப்படி இருந்தும் மாதவன், விஜய் சேதுபதி, சித்தார்த் போன்றவர்கள் இந்தப்படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்திருக்கிறார்கள். இது தவறான விஷயம் என்ற ஆதங்கம் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதாம்.
நம்மை நக்கலடிக்கும் படத்தை நாமே ஆதரிக்கலாமா என்று வருத்தப்பட்டுள்ளனர். இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.



Leave A Comment
You must be logged in to post a comment.