பிரசாத் ஸ்டுடியோ இயக்குனர் உட்பட மூன்று பேர் மீது இசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிலுள்ள ஸ்டூடியோ 1 ஐ, அதன் நிறுவனர் எல்.வி.பிரசாத் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக இளையராஜா அந்த ஸ்டுடியோவில் வைத்து ஒலிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ இயக்குனரும், எல்.வி. பிரசாத்தின் பேரனுமாகிய சாய் பிரசாத் ஸ்டுடியோ 1-ல் சில மேசைகளை போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து இசையமைக்க விடாமல் இடையூறு செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா குழுவில் உள்ள இசைக்கலைஞர்கள் தங்களது கருவிகளை அங்கேயே வைத்து பூட்டுவது வழக்கமாக இருந்த நிலையில் இளையராஜா குழுவினரின் இசைக்கருவிகள் சேதமாக வாய்புள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை ஆக்கிரமித்ததாக பிரசாத் ஸ்டுடியோ இயக்குனர் சாய் பிரசாத், ஊழியர்கள் பாஸ்கர் மற்றும் சிவராமன் ஆகியோர் மீது இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் போலீசார் வழக்கை விசாரித்த வருகின்றனர்.
Leave A Comment
You must be logged in to post a comment.