கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது.
அதில் நேற்று இரவு திடீரென ஒரு கிரேன் சாய்ந்து விழுந்ததில் நசுங்கி மூன்று பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் தான் உயிர் தப்பியது பற்றி பேசியுள்ளார். “நான், கமல், காஜல் மூவரும் 10 நொடிகளில் உயிர் தப்பியுள்ளோம். நாங்கள் அமர வேண்டிய கூடாரம் மீது தான் கிரேன் சாய்ந்துள்ளது” என குறிப்பிட்டு போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

Leave A Comment
You must be logged in to post a comment.